Saturday 27th of April 2024 09:28:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹொங்கொங் ஒப்படைப்பு தின  போராட்டங்களுக்கு சீனா தடை!

ஹொங்கொங் ஒப்படைப்பு தின போராட்டங்களுக்கு சீனா தடை!


ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி வருடம் தோரும் ஹொங்கொங்கில் இடம்பெறும் ஹொங்கொங் ஒப்படைப்பு தின போராட்டங்களை நேற்று முன்னெடுக்க முடியாதவாறு சீனா தடை விதித்தது.

பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹொங்கொங் சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஜூலை 1 ஒப்படைக்கப்பட்டதை ஒட்டி வருடம் தோரும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறுவது வழமையாகும்.

ஹொங்கொங் விக்டோரியா பூங்கா பகுதியில் வழமையாக இவ்வாறான ஆா்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் இந்த ஆா்ப்பாட்டங்கள் இடம்பெறாது தடுக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கைகளையும் அந்தப் பகுதியில் பொலிஸார் காட்சிப்படுத்தினர்.

கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி கடந்த ஆண்டும் ஜூன் 1-ஆம் திகதி ஹொங்கொங் ஒப்படைப்பு தின ஆா்ப்பாட்டங்கள் நடத்த சீன அரசு தடை விதித்தது.

பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹொங்கொங் கடந்த 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹொங்கொங் மக்களுக்கு, சீனாவின் ஏனைய பகுதிகளில் இல்லாத சுதந்திரம் அளிக்கப்படும் என்று அப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஹொங்கொங் விடுதலை கோரியும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஹொங்கொங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கும் வகையில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியது.

அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அப்பிள் டெய்லி பத்திரிகை முடக்கப்பட்டுள்ளது. அந்த பத்திரிகை நிறுவனா் ஜிம்மி லாய் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 20 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE